» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:43:41 PM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (ஏப்ரல் 13) மிக விமரிசையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் 9-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் விளா பூஜைகள் நடைபெற்றன.
உற்சவர் சுவாமி மற்றும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர். பக்தர்களின் "அரோகரா" கோஷங்களுக்கு இடையே முதலில் சுவாமி தேரும், அதனைத் தொடர்ந்து அம்மன் தேரும் இழுக்கப்பட்டன. நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்த தேர்கள் நிலை வந்து சேர்ந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு ஒயிலாட்டம், கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வேட்பாளர்கள் பங்கேற்பு
விழாவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி வேட்பாளருமான கடம்பூர் செ. ராஜூ, பாஜக மாநிலத் தலைவரும், திருநெல்வேலி தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன், திமுக சார்பில் கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் கா. கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்றைய தேரோட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் ஒன்றாகப் பங்கேற்றது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
விழாவில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் சண்முகராஜ், திருப்பதிராஜா, நிருத்திய லட்சுமி, ரவீந்திரன் மற்றும் தமாகா மாவட்டத் தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்புப் பணியில் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவின் தொடர்ச்சியாக நாளை (14-ம் தேதி) தீர்த்தவாரியும், 15-ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தீவிர வாக்குச் சேகரிப்பு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:16:08 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை ரூ.83 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.19 லட்சம் பொருட்கள் பறிமுதல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:28:53 PM (IST)

குடும்பச் சூழல்: மனவேதனையில் இருவர் தற்கொலை!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:01:41 PM (IST)

சிறுவனை அடித்ததை தட்டிக்கேட்ட தந்தை மீது கல்வீசி தாக்குதல் : தூத்துக்குடியில் ரவுடி கைது!
திங்கள் 13, ஏப்ரல் 2026 11:17:06 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை தமிழ் புத்தாண்டு விழா : ஏற்பாடுகளை தீவிரம்
திங்கள் 13, ஏப்ரல் 2026 11:16:15 AM (IST)







