» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இதுவரை ரூ.83 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.19 லட்சம் பொருட்கள் பறிமுதல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:28:53 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.83 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.19 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, இன்று வரை பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார்.
பறிமுதல் விவரங்கள்:
- ரொக்கத் தொகை: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 83,03,266/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- இலவசப் பொருட்கள்: வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 13,71,671/- மதிப்பிலான இலவசப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
- மதுபானங்கள்: விதிமீறலாகக் கொண்டு செல்லப்பட்ட ரூ. 5,44,499/- மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, ஆவணங்களின்றி அதிகப்படியான பணம் அல்லது பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உரிய ஆவணங்களுடன் பணத்தைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தீவிர வாக்குச் சேகரிப்பு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:16:08 PM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:43:41 PM (IST)

குடும்பச் சூழல்: மனவேதனையில் இருவர் தற்கொலை!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:01:41 PM (IST)

சிறுவனை அடித்ததை தட்டிக்கேட்ட தந்தை மீது கல்வீசி தாக்குதல் : தூத்துக்குடியில் ரவுடி கைது!
திங்கள் 13, ஏப்ரல் 2026 11:17:06 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை தமிழ் புத்தாண்டு விழா : ஏற்பாடுகளை தீவிரம்
திங்கள் 13, ஏப்ரல் 2026 11:16:15 AM (IST)







