» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பச் சூழல்: மனவேதனையில் இருவர் தற்கொலை!

திங்கள் 13, ஏப்ரல் 2026 12:01:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் குடும்பச் சூழல் காரணமாக வாலிபர் உட்பட இருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பாரதியார் தெருவைச் சேர்ந்த சுப்பரமணியன் மகன் சண்முகவேல் (54). இவரது உடன் பிறந்த நான்கு சகோதரர்களும் ஏற்கனவே மனநிலை பாதிப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால், தனது முதிய பெற்றோரை அரவணைத்துக் கவனித்துக் கொள்வதற்காகச் சண்முகவேல் திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுடனேயே வசித்து வந்தார்.

தனி ஆளாகப் பெற்றோரைப் பராமரித்து வந்த நிலையில், இன்று காலை சண்முகவேல் தனது வீட்டின் சமையலறையில் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் வாலிபர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து முறப்பநாடு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயகுறிச்சி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலை மகன் மாடசாமி (35). இவர் கடந்த சில காலமாகத் தனது குடும்பத்தைப் பிரிந்து, வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். மாடசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் அவர் அடிக்கடி மதுபோதையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாடசாமி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில்,  முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory