» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவருடன் கருத்துவேறுபாடு: இளம்பெண் மாயம் - காவல்துறையினர் வழக்குப் பதிவு!

திங்கள் 13, ஏப்ரல் 2026 10:42:43 AM (IST)

விளாத்திகுளம் அருகே கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஒருவர் திடீரென காணாமல் போனது குறித்து அவரது அக்கா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஜமீன் கரிசல்குளம், நாடார் தெருவைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவரின் மகள் அகல்யா (19). இவருக்குத் திருமணம் முடிந்து 5 மாதங்கள் ஆகின்றன. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 மாதங்களாக விளாத்திகுளம் காமராஜர் நகர் 2-வது தெருவில் வசிக்கும் தனது அக்கா திவ்யா (25) வீட்டில் அகல்யா வசித்து வந்துள்ளார்.

தனது கணவர் அடிக்கடி சந்தேகப்பட்டுத் தன்னிடம் சண்டை போடுவதாக, அகல்யா விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்த காவல்துறை விசாரணைக்குப் பிறகு, அகல்யா தனது தாய் வீடான தஞ்சாவூருக்குச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் தனது அக்கா திவ்யாவின் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற அகல்யா, நீண்ட நேரமாகியும் தஞ்சாவூர் சென்றடையவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த அவரது அக்கா திவ்யா, விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அகல்யாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory