» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை தமிழ் புத்தாண்டு விழா : ஏற்பாடுகளை தீவிரம்
திங்கள் 13, ஏப்ரல் 2026 11:16:15 AM (IST)
தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விஷு விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில், நாளை (14.04.2026, செவ்வாய்க்கிழமை) தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விஷு விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.
சித்திரை மாதப்பிறப்பை முன்னிட்டு, இக்கோயிலின் சுவாமி ஸ்ரீ ஆறுமுக நயினார் சன்னதியில் சித்திரை விஷு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை 4:00 மணிக்குத் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 4:30 மணிக்குத் திருவனந்தல் பூஜையுடன் வழிபாடுகள் தொடங்கும். அதிகாலை 5:00 மணிக்கு மூலஸ்தானத்தில் சுவாமி ஸ்ரீ ஆறுமுகப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகமும், காலை 6:00 மணிக்கு உருகு சட்ட சேவையும் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 7:00 மணிக்குச் சுவாமி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளுவார். காலை 10:00 மணிக்கு ஸ்ரீ சண்முகர் அபிஷேக மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறும். பிற்பகல் 2:30 மணிக்கு ஸ்ரீ ஆறுமுக அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெறும். இரவு 8:00 மணிக்குத் தீபாராதனை முடிந்து, இரவு 10:00 மணிக்குச் சுவாமி மூலஸ்தானம் சென்றடைவார்.
விழாவின் முக்கிய நிகழ்வாகச் சுவாமி மடம் வீதி மற்றும் நான்கு ரத வீதிகளில் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தீவிர வாக்குச் சேகரிப்பு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:16:08 PM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:43:41 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை ரூ.83 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.19 லட்சம் பொருட்கள் பறிமுதல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:28:53 PM (IST)

குடும்பச் சூழல்: மனவேதனையில் இருவர் தற்கொலை!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:01:41 PM (IST)

சிறுவனை அடித்ததை தட்டிக்கேட்ட தந்தை மீது கல்வீசி தாக்குதல் : தூத்துக்குடியில் ரவுடி கைது!
திங்கள் 13, ஏப்ரல் 2026 11:17:06 AM (IST)







