» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுவனை அடித்ததை தட்டிக்கேட்ட தந்தை மீது கல்வீசி தாக்குதல் : தூத்துக்குடியில் ரவுடி கைது!
திங்கள் 13, ஏப்ரல் 2026 11:17:06 AM (IST)
தூத்துக்குடியில் தனது மகனைத் தாக்கியதை தட்டிக்கேட்ட தந்தை மீது கல்வீசித் தாக்குதல் நடத்தி, வாகனத்தைச் சேதப்படுத்திய வழக்கில் ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி முனியசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (45), டைல்ஸ் தொழிலாளி. இவருடைய மகன் பிருத்விராஜை, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (38) என்பவரது மகன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி இரவு சுடலை காலனி நடுத்தெருவில் நின்று கொண்டிருந்த பிருத்விராஜை, அங்கு வந்த சதீஷ்குமார் திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீனிவாசன், தனது மகனை ஏன் அடித்தாய் எனக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், சீனிவாசனை ஆபாசமாகப் பேசியதுடன், கல்லை எடுத்து அவர் மீது வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இத்தாக்குதலில் சீனிவாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சீனிவாசனின் ஸ்கூட்டியையும் சதீஷ்குமார் அடித்து நொறுக்கினார். காயமடைந்த சீனிவாசன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை தென்பாகம் காவல் ஆய்வாளர் திருமூருகன் கைது செய்தார். கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் காவல்துறை ஆவணங்களில் 'சி' பிரிவு ரவுடியாக உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 08.04.2026 அன்றுதான் ஒரு வழக்கில் பிணையில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தீவிர வாக்குச் சேகரிப்பு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:16:08 PM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:43:41 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை ரூ.83 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.19 லட்சம் பொருட்கள் பறிமுதல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:28:53 PM (IST)

குடும்பச் சூழல்: மனவேதனையில் இருவர் தற்கொலை!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:01:41 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை தமிழ் புத்தாண்டு விழா : ஏற்பாடுகளை தீவிரம்
திங்கள் 13, ஏப்ரல் 2026 11:16:15 AM (IST)







