» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
வெள்ளி 13, மார்ச் 2026 8:40:03 AM (IST)
உடன்குடியில் வீட்டின் கதவை உடைத்து, 15 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (36), தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். காளியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காகக் கடந்த 9-ஆம் தேதி காலை 11 மணியளவில் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, தங்களது பிள்ளைகளை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றனர். அந்தச் சிறுவர்கள் பகலில் பள்ளிக்குச் சென்றுவிட்டு, இரவில் உறவினர் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் இரவு பேச்சிமுத்து தம்பதியினர் ஊர் திரும்பினர். உறவினர் வீட்டிலிருந்த பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றபோது, வீட்டின் பீரோ திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 25,000 ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வீட்டின் பின்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது உறுதி செய்யப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 4.5 லட்சம் ஆகும்.
இது குறித்துப் பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயங்கள் ஏதேனும் சிக்கியுள்ளதா என மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்தத் துணிகரக் கொள்ளை அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:43:41 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை ரூ.83 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.19 லட்சம் பொருட்கள் பறிமுதல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:28:53 PM (IST)

குடும்பச் சூழல்: மனவேதனையில் இருவர் தற்கொலை!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:01:41 PM (IST)

சிறுவனை அடித்ததை தட்டிக்கேட்ட தந்தை மீது கல்வீசி தாக்குதல் : தூத்துக்குடியில் ரவுடி கைது!
திங்கள் 13, ஏப்ரல் 2026 11:17:06 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை தமிழ் புத்தாண்டு விழா : ஏற்பாடுகளை தீவிரம்
திங்கள் 13, ஏப்ரல் 2026 11:16:15 AM (IST)

கணவருடன் கருத்துவேறுபாடு: இளம்பெண் மாயம் - காவல்துறையினர் வழக்குப் பதிவு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 10:42:43 AM (IST)







