» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

தூத்துக்குடி கருணாநிதி நகர் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் பறையர் சமூக மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆட்டோ.மா.கணேசன் மற்றும் பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில்,."தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் இருக்கக்கூடிய கருணாநிதி நகர் பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிதிராவிடர் பறையர் சமூக மக்கள் குடியிருந்து வருகின்றனர். தற்போது 200 குடும்பங்கள் மேற்படி பகுதியில் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு தற்போது வரை வீட்டு மனை பட்டா வழங்காமல் இருந்து வருகிறது. மக்கள் பலமுறை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தும், எவ்வித சரியான பதிலும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. மேற்படி பகுதியில் வசிக்கக்கூடிய ஆதிதிராவிடர் பறையர் சமூக மக்கள் பெரும்பாலும் கல்வியறிவற்ற கூலி வேலைக்கு செல்லக்கூடிய உழைக்கும் மக்களாகவே இருந்து வருவதால் அவர்களுடைய அறியாமையின் காரணமாகவும், ஏழ்மையின் காரணமாகவும் உரிய அதிகாரிகளை சந்தித்து முறையிடுவதோ அல்லது நீதிமன்றத்தை நாடி முறையிடுவதோ போன்ற வழிமுறைகள் தெரியாமல் போதிய கல்வியறிவற்ற மக்களாகவே வசித்து வருகின்றனர்.
மேற்படி கருணாநிதி பகுதியில் வாழக்கூடிய மக்களுக்கு வேறு எங்கும் அசையா சொத்தும் கிடையாது. தினக்கூலியாக வாழக்கூடிய மேற்படி மக்களுக்கு அவர்கள் வசிக்கும் குடியிருப்பிற்கு வீட்டு மனை பட்டா வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)










