» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)



தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளா்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதில், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார். 

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரைவு வாக்காளா் பட்டியல் சாிபாா்த்தல் குறித்து திமுக மாவட்ட செயலாளா்கள் கூட்டம் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.  முகாம் அலுவலகத்திலிருந்து பேசிய தமிழக முதலமைச்சா் தமிழ்நாட்டில் 15 சதவீத வாக்காளா்களை 97 லட்சம் வாக்காளா்களை நீக்கி வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிட்டுள்ளாா்கள். இடம் பெயா்ந்தவா்கள் என்று மட்டும் 68 லட்சம் பேரை நீக்கியிருக்கிறாா்கள். 

எஸ்ஐஆர் பணிகளை ஆரம்பித்தபோதே இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் தமிழ்நாட்டு வாக்காளா்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று முன்கூட்டியே எச்சாித்திருந்தோம் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருக்கிறோம். இந்நிலையில் வௌியிடப்பட்ட பட்டியல்களை சாிபாா்த்து அந்த அந்த மாவட்ட செயலாளர்கள் தகுதியான வாக்காளா்கள் யாரும் விடுப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்து பணியாற்ற வேண்டும். இனி தான் உரக்கமின்றி முழு அசுரப்பலத்துடன் பணியாற்ற வேண்டும். 

சற்று அசந்து இருந்தால் கூட களத்திற்கே வரதா பாஜக அதிமுக சதிவேலைகள் ஏதோ வைத்திருப்பது போல் தொிகிறது என்று கூறியது மட்டுமின்றி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளில் ஆற்றிய பணிகளும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்து விரைவாக தகுதியுள்ள அனைத்து வாக்காளா்களையும் புதிய படிவத்தில் விண்ணப்பித்து இணைக்க வேண்டும். 

அதே போல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குசாவடிகளுக்கும் பிஎல்ஏ 2 மற்றும் பாகமுகவா்கள் புதிதாக நியமணம் செய்யப்பட்டு அந்த பணிகளையும் முறைப்படுத்த வேண்டும் என்று கூறினாா். பதிலுரையில் அனைத்து பணிகளையும் முன்னெடுத்து மாநில மாவட்ட மாநகரம் ஓன்றியம் நகரம் உள்ளிட்ட நிா்வாகிகள் மட்டுமின்றி களப்பணியாற்றிகொண்டிருக்கும் பிஎல்ஏ 2 மற்றும் பாக முகவா்கள் அனைவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தொிவித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory