» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி டூவிபுரம் பிரதான சாலையில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள், தாலுகா அலுவலகம் உட்பட முக்கிய பகுதிகள் அமைந்துள்ளது. இந்த சாலையில் கடந்த ஓராண்டிற்கு மேலாக உபயோகப்படாத வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டில் உள்ள கழிவுப்பொருட்களை சாலையின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்குக இடையூறாக உள்ளது. பாதசாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சம்பவ இடத்தில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நீண்ட நாள் செயல்பாட்டிற்கு இல்லாத வாகனங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)










