» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)
மெஞ்ஞானபுரம் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மேலும் 2பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாசபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் அந்தோணி பீட்டர் (23), இவர் மூக்குபீறியில் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலை நிமித்தமாக நாசரேத்தில் டி.கே.சி. நகர் சந்திப்பு பகுதியிலிருந்து அச்சம்பாடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்ேபாது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்தோணிபீட்டர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த கல்லூரி மாணவர்களான சாத்தான்குளம் காமராஜ்நகரை சேர்ந்த ஆண்ட்ரோஸ் பிரபு மகன் நார்மன் ஜோஸ்வா (18), வெங்கட்ராயபுரம் வடக்குதெருவை சேர்ந்த பேச்சி மகன் சுடலை சூர்யா (19), சாத்தான்குளம் கொத்துவா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரிபாயுதின் மகன் பெரோஸ்கான் (18) ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த 3 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நார்மன் ஜோஸ்வா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)










