» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!

திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)



நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல மேலாளர் காபிரியேல் தேவயிரக்கம் ஜெபராஜன் பங்கேற்றார்.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல மேலாளரும், கல்லூரி தாளாளருமான காபிரியேல் தேவயிரக்கம் ஜெபராஜன் தலைமை வகித்தார். கல்லூரி குருவானவர் வனிதாராணி ஆபிரகாம் ஆரம்ப ஜெபம் செய்தார். எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவு துறைத் தலைவர் ஆக்னஸ் பிரேமா வேதபாடம் வாசித்தார். 

கல்லூரி பாடகர் குழுவினர் கிறிஸ்மஸ் பாடல் பாடினர். பாடினர்.பேராசிரியர் பிளஸ்ஸிங் மேசாக் பாடகர் குழுவை வழிநடத்தினார்.சிறப்பு விருந்தினர்களாக திருமண்டல தேர்தல் அதிகாரி ஜான் சந்தோஷம், வாராங்கல் பவானி ஸ்வீட்ஸ் உரிமையாளர் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பேசினர். தொடர்ந்து கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் டினட்டா துபாய் துணை மேலாளர் மகேஸ் குகன், பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாத்ராக்தாஸ், திருநெல்வேலி ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல்வர் சுமைலி ஜெபரஞ்சினி, சாமுவேல் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை பேராசிரியர் ஸ்டேன்லி ஜாண்சன் தொகுத்து வழங்கினார்.

முன்னதாக திருமறையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் பயி லும் 30க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியருக்கு புத்தாடைகளும், கல்லூரி ஆசிரியர்கள், பணியா ளர்களுக்கு இனிப்புடன் கிறிஸ்துமஸ் வெகுமதி மற்றும் பரிசுகளை கல்லூரி தாளாளர் காபிரியேல் தேவயிரக்கம் ஜெயராஜன் வழங்கினார். நிறைவாக கல்லூரி முதல் வர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory