» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!

ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)



தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக பள்ளி கல்லூரிகளில் பரபரப்பாக நடந்து வந்த "விதைப்பந்து புரட்சி” தற்போது உலகின் பல நாடுகளை எட்டியுள்ளது.
 
ராஜ் தொலைக்காட்சி விதைப்பந்து விஷயத்தை சமூக அக்கறையுடன் உலகமெங்கும் 2026 புத்தாண்டில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த பிரதான பணியை ராஜ் டிவி இயக்குனர்கள், பிரபல அகட விகடம் பாஸ்கர்ராஜ் மூலமாக செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இதயா பெண்கள் கல்லூரி வளாகத்தில் நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து முன்னிலையில் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் விதைப்பந்துகள் அவசியம் பற்றி பேசினார். உலகின் 140 நாடுகளில் 2026 ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டில் காலை 10 மணிக்குள் விதைப்பந்து விஷயம் உலக நாடுகளில் காலெடுத்து வைக்கிறது.

விதைப்பந்துகள் விஷயத்தை மத்திய மாநில அரசுகள், இந்தியாவின் பிற மாநிலங்கள் எப்போது கவனிக்கப் போகின்றன என்பது தெரியவில்லை. ஆனால் உலக நாடுகளின் வல்லுனர்கள், இயற்கை ஆர்வலர்கள், மரம் வளர்ப்போர் கண்டிப்பாக இதனை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். உலகின் மர எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என டிரஸ்ட் நன்னன் தெரிவித்தார். கும்பகோணம் விதைப்பந்து விழிப்புணர்வு வேகமெடுத்திருப்பதாக திருப்பூர் தர்மராஜ், அம்பை மரகதசுப்பிரமணியன் தெரிவித்தனர். 

இதயா கல்லூரியின் முதல்வர் யூஜின் அமலா தாளாளர் அமலோற்பவ மேரி ஆகியோரிடம் திருமாறன் விதைப்பந்துகளை வழங்கினார். ஒரு மண் உருண்டைக்குள் ஐந்து மரங்கள் முளைக்கக் காத்திருப்பதை மக்கள் புரிந்து கொண்டால் பூமி பசுமைப்படும், ஆக்சிஜன் நம் அனைவரின் வசப்படும் என்ற குரல் 2026 புத்தாண்டின் பிரதான பிரச்சாரமாக இருக்கட்டும் என வாழும் சித்தர் ராஜ் டி.வி பாஸ்கர்ராஜ், சமூக நல ஆர்வலர் திருமாறன் "இதயா” மகேந்திரன் தெரிவித்தனர். 

கண்களைத் திறப்போம், காதுகளை விரிப்போம், காடுகளை விரியச் செய்வோம்! லட்சக்கணக்கில் விதைப்பந்துகளை மாணவிகளைக் கொண்டு புத்தாண்டில் செய்து வீச இமாக்குலின், அருட்சகோதிரிகள், இதயா கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory