» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு

திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)



ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக தூத்துக்குடியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பாக மாவட்ட அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு 2026 விழா நடைபெற்றதுசமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ். நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் வடக்கு மாவட்ட தலைவர் பரமசிவன் ஆகியோர் தலைமை வகித்தனர்

நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ் வரவேற்புரை ஆற்றினார். பேட்ரிக் சர்ச் பாதிரியார் ஆனந்த் மணி ஆசி உரையாற்றினார் இவ்விழாவில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவரும் சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். பின்னர் ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது "அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இரண்டு தொகுதிகளை கேட்க உள்ளோம். இதில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நாம் இப்போது தயாராக உழைக்க வேண்டும். 

இதனால் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் பட்டியலை சரி பார்க்க வேண்டும். மேலும் பாகம் வாரியாக கணக்கெடுத்து வெளியூரில் இருக்கும் வாக்காளர்களை அடையாளம் காண வேண்டும் தாங்கள் அனைத்து வேலைகளையும் பார்த்து என்னிடம் வாக்காளர் பட்டியலை கொடுத்தால் சீட் வாங்குவது எனது பொறுப்பு மேலும் அந்த தொகுதியில் நானே போட்டியிட உள்ளேன் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன் தலைமைச் செயலக முன்னாள் அதிகாரி ரவீந்திரன் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் பழனிவேல் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ் மாவட்ட துணை செயலாளர்கள் அருள்ராஜ், அந்தோணி சேவியர் பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், சந்திரா, ஜேசுச்செல்வி, ஜெப ராணி, ராதா லட்சுமி, பனிமதி, சாந்தி, பிரம்ம சக்தி, பாத்திமா ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலாஜி கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் கயத்தார் ஒன்றிய செயலாளர் சவரி மிக்கேல் திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ் திருச்செந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாடார் மாநகர அவைத்தலைவர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory