» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அகில இந்திய மின்னொளி கூடைப்பந்து போட்டி : பெங்களூர், சென்னை அணிகள் சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 11:33:12 AM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கல்லூரி அணிகளுக்கிடையேயான மின்னொளி கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் பெங்களூர் அணியும், ஆண்கள் பிரிவில் சென்னை அணியும் கோப்பையை வென்றன.
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 15வது அகில இந்திய பல்கலைக்கழக கல்லூரி ஆண்–பெண் பிரிவு மின்னொளி கூடைப்பந்து போட்டி கடந்த 29ஆம் தேதி தொடங்கி, நவ.2ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி அணிகள் கலந்து கொண்டனர்.
பெண்கள் பிரிவில் லீக் முறையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் எம் ஓ பி வைஷ்ணவ் கல்லூரி அணியும் பெங்களூர் ஜெயின் யுனிவர்சிட்டி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூர் ஜெயின் யுனிவர்சிட்டி அணி 69-60 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இதைத்தொடர்ந்து ஆண்கள் பிரிவில் சென்னை இந்துஸ்தான் கல்லூரி அணியும் பெங்களூர் ஜெயின் யுனிவர்சிட்டி அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை இந்துஸ்தான் கல்லூரி அணி 77-67 என்ற புள்ளி வெற்றி பெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப் விழாவில் வெற்றி பெற்ற அணிக்கு ரொக்க பரிசு மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:13:53 AM (IST)

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)










