» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)



முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் எஸ்பி சண்முகநாதனிடம், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் தூத்துக்குடி தொகுதி வேட்பாளருக்கான விருப்ப மனுவை சமர்பித்த்தார். 

தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமாக எம்.ஜி.ஆர் மாளிகையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதன்படி கடந்த 15ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மட்டுமின்றி எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டும் என்று பலர் விருப்ப மனுக்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 23ம் தேதிக்குள் தெற்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் சென்னை எம்ஜிஆர் மாளிகையில் விருப்பமனு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்  டூவிபுரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். 23ம் தேதிக்குள் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு வழங்கும் அந்தோணி கிரேஸ்  நகர்மன்ற உறுப்பினராகவும் மாவட்ட மகளிரணி செயலாளராகவும் பணியாற்றி மேயராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிரணி தலைவியாக இருந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory