» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு

வெள்ளி 19, டிசம்பர் 2025 11:13:53 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது : தேசிய சிறுபான்மையினர் நல உரிமைகள் தினத்தின் அடிப்படை நோக்கம் சிறுபான்மையினர்களின் நலன்களை, குறிப்பாக சமூக பொருளாதார நலன்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், அரசியலமைப்பு வழங்கி இருக்கக் கூடிய சிறுபான்மையினர்களுக்கான பல்வேறு விதமான உரிமைகளை நிலைநாட்டி, அவர்களை நமது சமூகத்தில் மிகவும் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 

நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் சிறுபான்மையினர் மக்கள் அதிகமான எண்ணிக்கையில் வாழக்கூடிய மாவட்டமாக உள்ளது. நமது மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கங்கள் மூலம் ஏறக்குறைய ரூ.10 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகை திரட்டப்பட்டு, அவர்களுக்கு உதவிகளாக வழங்கப்பட்டிருக்கின்றன. 

அதேப்போன்று பல்வேறு திட்டங்கள் மூலமாக குறிப்பாக தையல் இயந்திரம் மற்றும் பிற அரசு துறைகளின் திட்டங்களில் எல்லாம் சிறுபான்மையினர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கான முழுமையான பங்களிப்பினை ஏற்படுத்தி வருகிறோம்.
மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வருகை தந்த, மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் பல்வேறு சிறுபான்மையினர் மக்களுடைய பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.

கூறிய கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, சிறுபான்மையினர் நலன் சார்ந்த சட்டப்பூர்வமான அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு, பல்வேறு கோரிக்கைகள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. 

இந்த சிறுபான்மையினர் உரிமைகள் தின நிகழ்விலும் இதுபோன்ற புதிய கோரிக்கைகள் இருந்தாலும் அளிக்கலாம். அந்த மாதிரியான கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து, சட்ட விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். எனவே, இந்த தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தில் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இன்றையதினம் நடைபெற்ற தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், 2024 - 2025ம் கல்வியாண்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பெற்ற சிறுபான்மையினர் மாணவியர்களுக்கு புத்தகம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 34 பயனாளிகளுக்கு ரூ.20,000/-க்கான காசோலைகள் மற்றும் கிறிஸ்துவ தேவலாயங்களில் பணிபுரியும் 10 உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.செந்தில்வேல் முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜா.பென்னட் ஆசீர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, தூத்துக்குடி மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் கௌரவ செயலாளர் பெஞ்சமின் டி சோஷா, சிறுபான்மையினர் மக்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory