» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே தந்தை மீதான முன்விரோதத்தில் பள்ளி மாணவரை கடத்திய 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகே உள்ள குரங்கணி, காட்டேரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கசாமி மகன் அபினேஷ் (16). இவர் மாவடிப்பண்ணையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளி முடிந்து வந்து கொண்டிருந்த அபினேஷை, அவரது தந்தையின் மீதான முன்விரோதத்தில் 3 சிறுவர்கள் பைக்கில் கடத்திச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, அபினேஷின் அண்ணன் முத்து நாராயணனை கைப்பேசியில் அழைத்து, உன் தம்பியை கடத்திச் செல்கிறோம் என்று கூறியுள்ளனர். இது குறித்து, ஆழ்வார் திருநகரி காவல் நிலையத்தில் தங்கசாமி புகாரளித்தார். புகாரின்பேரில், போலீசார் சிறுவர்கள் சென்ற வழியைப் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது, கூட்டாம்புளி மெயின் ரோட்டில் அபினேஷை இறக்கிவிட்டு 3 சிறுவர்களும் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக, வியாழக்கிழமை 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து, தூத்துக்குடி குழந்தைகள் நல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, பாளையங்கோட்டை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)










