» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி வண்ணார் முதல் தெருவை சேர்ந்தவர் காந்திமதிநாதன் மகன் சரவணகுமார் (41), இவர் கடந்த 16ஆம் தேதி இரவு 8:55 மணி அளவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தூத்துக்குடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள மாநகராட்சி சார்பில் நடத்தப்படுகின்ற வாகன காப்பகத்தில் நிறுத்திவிட்டு மறுநாள் 17ஆம் தேதி தன்னுடைய இருசக்கர வாகனத்தை சரவணகுமார் சென்று பார்த்த போது வாகனம் காணவில்லை.
இது தொடர்பாக அங்கு பணியில் உள்ள மாநகராட்சி பணியாளர்களை கேட்டபோது எந்த ஒரு பதிலும் மாநகராட்சி பணியாளர்கள் கூறவில்லை. அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவை பார்த்தபோது ஒருவர் அந்த காணாமல் போன இருசக்கர வாகனத்தை மாநகராட்சி வாகன காப்பகத்தில் இருந்து எடுத்துச் செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. இதனையடுத்து சரவணக்குமார் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் மாநகராட்சி வாகன காப்பகத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதாகவும் புகார் கூறப்படுகிறது. அங்கு சரியான முறையில் பணியாளர்கள், செக்யூரிட்டிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் வாகனத்தை விடுகின்ற இருசக்கர வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் வரும் காலங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டு போகாத வகையில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)











என்னதுDec 19, 2025 - 11:04:15 AM | Posted IP 162.1*****