» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் புதிதாக 60 டன் திறன் கொண்ட ஓசியன் அலையன்ஸ் என்ற இழுவை படகு வந்தது.

இழுவை படகு வரவேற்பு நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் மற்றும் மூத்த துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்திய தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இழுவை படகானது 60 டன் திறன், 498 டன் மொத்த உள்புற கனஅளவை கொண்டது. இப்படகு உடுப்பியிலுள்ள, கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டதாகும்.

வ.உ.சி. துறைமுகம், இந்த இழுவை படகை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை குஜராத்தில் அமைந்துள்ள Ocean Sparkle Limited நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. மேலும் இந்த இழுவை படகு 7 ஆண்டு காலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த இழுவை படகுடன் சேர்த்து துறைமுகத்தில் மொத்தம் 4 இழுவை படகுகள் செயல்படும். அவற்றில் ஒன்று 45 டன் திறன் கொண்ட துறைமுகத்துக்குச் சொந்தமான இழுவை படகு, மற்ற இரண்டும் தலா 50 டன் திறன் கொண்ட ஒப்பந்த இழுவை படகுகள் ஆகும்.

தற்போது சேர்க்கப்பட்டுள்ள 60 டன் திறன் இழுவைப் படகு எளிமையான மற்றும் பாதுகாப்பான கப்பல் இயக்கத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. இதுகுறித்து வ.உ.சி. துறைமுகத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறுகையில், 60 டன் திறன் இழுவைப் படகின் சேர்க்கையால், துறைமுகத்தின் செயல்திறன் பெரிதும் மேம்படும். பெரிய கப்பல்களின் பாதுகாப்பான கையாளும் திறன் உறுதி செய்யப்படும். துறைமுகத்தினுள் கப்பல்கள் வந்து செல்லும் நேரம் குறைக்கப்படும். இது துறைமுகத்தின் திறனை வலுப்படுத்துவதிலும், இந்தியாவின் கடல்சார்ந்த வளர்ச்சியை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory