» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
திங்கள் 22, செப்டம்பர் 2025 8:24:44 AM (IST)
பாவூர்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கட்டாரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் செல்வராஜ் மகன் சுதாகர் (21). கூலித்தொழிலாளியான இவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த மூன்று மாதத்திற்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து சுதாகர் தனது காதல் மனைவியுடன் பாவூர்சத்திரத்திலேயே தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
ஆசை ஆசையாக காதல் வாழ்க்கையை தொடங்கிய நிலையில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட தொடங்கியது. இதனால் மனவேதனை அடைந்த சுதாகர் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சுதாகர் திடீரென விஷம் குடித்துவிட்டு மயங்கினார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சுதாகர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் அவர் நேற்று முன்தினம் இரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:13:53 AM (IST)

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)










