» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளிர் உதவி எண் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்
சனி 8, மார்ச் 2025 3:07:35 PM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் உதவி எண் 181-ஐ விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று நடைபெற்ற பெண்களுக்கான மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்ந நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்ட மகளிர் காவல் துறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 600க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
மாரத்தான் நிகழ்ச்சி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பிலிருந்து துவங்கி ரோச் பூங்காவிலும், வாக்கத்தான் நிகழ்ச்சி பழைய துறைமுகம் சந்திப்பிலிருந்து துவங்கி ரோச் பூங்காவிலும் நிறைவடைந்தது. பின்னர் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்த பெண்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கி பாராட்டினார். போட்டிகளில் பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)










