» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள்
சனி 8, மார்ச் 2025 10:28:53 AM (IST)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஏற்பாட்டில் விளாத்திகுளத்தில் மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் விளாத்திகுளம் மதுரை சாலையில் சின்னமாடு பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்றது.
போட்டியில் மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், சிவகங்கை,தேனி, புதுக்கோட்டை, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 68 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சிரிப்பாய்ந்தன. பூஞ்சிட்டு பந்தயத்திற்கு 10 கிலோ மீட்டர் தூரமும், சின்ன மாட்டிற்கு 14 கிலோமீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
விழாவில் விளாத்திகுளம் திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், நவநீதக் கண்ணன், காசி விஸ்வநாதன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, அன்பு ராஜன், திமுக செயற்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் இம்மானுவேல், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், திமுக கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மகளிர் அணி உட்பட போட்டியை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)










