» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மகளிர் தின விழா: நடிகை தீபா பங்கேற்பு

சனி 8, மார்ச் 2025 10:21:31 AM (IST)


தூத்துக்குடியில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நடிகை தீபா சங்கர் கலந்து கொண்டு சாதனை படைத்த மகளிருக்கு விருதுகளை வழங்கினார்.

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் 13ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட மகளிரணி செயலாளரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான பி.ராஜம் தலைமை வகித்தார். 

மாநில இணைச் செயலாளர் பீட்டர், மாநில துணைத் தலைவர் வெற்றிராஜன், வடக்கு மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா, செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ஆனந்த்பொன்ராஜ், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் மற்றும் பெண்கள் சேவா டிரஸ்ட் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில், திரைப்பட நடிகை தீபா சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் கிராமிய கலை, ஓவியம், பரதம், வர்மகலை, யோக கலை, வில்வித்தை, தமிழ் இலக்கியம், சிலம்பம், வில்லுப்பாட்டு போன்ற பல்வேல்று துறைகளில் சாதனை படைத்த 80 பேருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். 

விழாவில், சகா கிராமிய கலை குழுவினர் பறை இசை, ஒயில் ஆட்டம், சிலம்பாட்டம், ஸ்வேதா தர்ஷினி குழுவினரின் பரதம் அரசு இசை பள்ளி சார்பாக ஜவகர் கலை வகுப்பு மாணவி பரதம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 


நிகழ்ச்சியில், தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரிய ஸ்வர்ணலதா, சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை மருத்துவர் ஆர்த்தி கண்ணன், நெல்லை சேவா பவுண்டேஷன் அன்னபூர்ணா, எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜலட்சுமி, காவல் உதவி ஆய்வாளர்கள் கற்பகவல்லி, விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் விஷ்வரூபினி, வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல்  உள்பட பலர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory