» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.80 கோடி போதைப் பொருள் சிக்கியது: 2 பேரிடம் விசாரணை
சனி 8, மார்ச் 2025 8:51:33 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.80 கோடி மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது. இது தொடர்பாக 2பேரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு நோக்கி, கருங்கற்கள் ஏற்றிக்கொண்டு சென்ற பார்ஜர் என அழைக்கப்படும் மிதவை கப்பலை, சந்தேகத்தின்பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டுவந்தனர்.
அதில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 16 பொட்டலங்களில் 29 கிலோ ‘ஹசீஷ்’ என்ற வகை போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ .80 கோடி என்று தெரிகிறது. இதனை கடத்தி சென்றதாக பார்ஜரில் வேலை செய்து வரும் திருச்செந்தூர் ஆலந்தலையை சேர்ந்த கிளிப்டன், உடந்தையாக இருந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நவமணி ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)










