» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓட்டல் ஊழியருக்கு அரிவாள் வெட்டு : 2பேர் கைது
சனி 8, மார்ச் 2025 8:49:18 AM (IST)
தூத்துக்குடியில் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஓட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டியதாக 2பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சோலைபுரத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் இசக்கிராஜ் (31). இவர், தூத்துக்குடி காதர்மீரான் நகரில் தங்கியிருந்து தெர்மல் நகர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைசெய்து வருகிறார். இந்நிலையில், உணவகத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் நேற்று முன்தினம் வந்து சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றாராம்.
இதைத் தட்டிக்கேட்ட இசக்கிராஜை, மணிகண்டன், தனது நண்பர் சரவணன்(29) என்பவருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டியதுடன், பொருள்களை சேதப்படுத்திவிட்டு தப்பினாராம். இதில் பலத்த காயமடைந்த இசக்கிராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டன், சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மணிகண்டன் மீது 6 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)










