» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குலசை முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.56 லட்சம் வருவாய்
சனி 8, மார்ச் 2025 8:34:31 AM (IST)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.56 லட்சம், 210 கிராம் தங்கம், 1221 கிராம் வெள்ளி கிடைத்தது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும்.
அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை கோயிலில் உள்ள 18 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூபாய் 56 லட்சத்து 3ஆயிரத்து 640 காணிக்கையாக கிடைத்தது. மேலும் 210 கிராம் தங்கம் 1221 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பெறப்பட்டன.
அறநிலையத்துறை துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், செயல் அலுவலர் வள்ளிநாயகம், சாத்தான்குளம் சரக ஆய்வர் முத்து மாரியம்மாள், அயல் பணியாளர் வெங்கடேஸ்வரி, அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், உடன்குடி திமுக பிரமுகர் ஹரி கிருஷ்ணன் மற்றும் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டு காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)










