» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ.20கோடி ஒதுக்கிட வேண்டும் : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
சனி 8, மார்ச் 2025 8:22:36 AM (IST)
தமிழ்நாடு பட்ஜெட்டில் உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திற்கு குறைந்தபட்சம் 20 கோடி நிதி ஒதுக்கீட வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் மாநிலத் தலைவர் மா.கிருஷ்ண மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை மற்றும் இதர துறைகளிலும் இயங்கும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களுக்கும் ஜிஎஸ்டியில் (GST) ஒரு சதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் 3 சதம் நிதி அமைப்புசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். பட்ஜெட்டில் உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திற்கு குறைந்தபட்சம் 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உப்பள தொழிலாளர் நலவாரியத்தை நடைமுறை செயல்பாட்டிற்கு துரிதமாக கொண்டு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசு உப்பள தொழிலாளர் நல வாரியத்திற்கு உப்பு உற்பத்தியில் மற்றும் உப்பு ஏற்றுமதியில் 1 சதம் லெவி ஒதுக்கீடு செய்திட வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென உரிய முழுமையான நிதி ஒதுக்கீட்டுடன் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)










