» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தினம்

சனி 21, ஜூன் 2025 11:18:39 AM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ஆ.ஜெயாசண்முகம் தலைமையில் நடைப்பெற்ற யோகா தினத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்த யோகா பயிற்சியாளர்கள் சரத்குமரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர்  கலந்து கொண்டு யோகாவின் சிறப்பு பலன்களையும், நம்முடைய உணவுமுறை பற்றியும் எடுத்துக் கூறினார்கள். 

அதன்பின் மாணவ, மாணவியர்களுக்கு சூரியநமஸ்காரம் தொடங்கி பத்மாசனம், யோகமுத்ரா, பஸ்திமோத்தாசனம், திருகோணசனம், வச்சிராசனம் போன்ற பலவகை ஆசனங்களை செயல் விளக்கம் செய்து காட்டி மாணவ, மாணவியர்களை செய்ய வைத்து ஆர்வமூட்டினார்கள்.

பள்ளியின் முதல்வர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். நிறைவாக ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் துணைமுதல்வர் ரா.ச.பிரியங்கா நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory