» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் தேசிய நூலக வார விழா நடந்தது.
நாடு முழுவதும் பொதுமக்களிடம் குறைந்த செலவில் நிறைந்த படிப்பினை தரும் பொது நூலகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நூலக வார விழா நவம்பர்14முதல் 21ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் நடந்த தேசிய நூலக வாரவிழாவிற்கு தலைமையாசிரியர் லால்பகதூர் கென்னடி தலைமை வகித்தார்.
இதில் நூலக ஆர்வலர் ஆறுமுகசாமி கலந்துகொண்டு 25 மாணவர்களுக்கான நூலக உறுப்பினர் தொகையை செலுத்தினார். இதில் 25 மாணவர்கள் எட்டயபுரம் அரசு பொது நூலகத்தில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர். அரசு கிளை நூலகர் முத்து இருளப்பன் கலந்துகொண்டு நூலக விதிகள் மற்றும் வசதிகள் குறித்து பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

