» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
விழாவிற்கு பள்ளியின் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் வைலட் லலிதா தேவமணி தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐ. எமல்டா வெலன்சியா ஹெஸியா அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக பள்ளியில் ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியை சற்குண சாந்தநாயகி, ஆசிரியை நாகரத்தினம், முன்னாள் பள்ளி மாணவரும், S.M.C குழு உறுப்பினரும் ஆகிய தர்மராஜ், S.M.C குழு பெற்றோர் உறுப்பினர்களான எடிசன், T.கிரேஸ் சித்ரா மற்றும் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
யோகா ஆசிரியர் சுந்தரவேல் ஜிம்னாஸ்டிக் ஆசிரியர் மாரி செல்வம் சிலம்பம் ஆசிரியர் மாரி கணேஷ் ஆகியோர் பங்கு பெற்றனர். தலைவர் குடியரசு தின விழா பற்றி சிறப்புரையும், சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரையும் வழங்கினார்கள். மாணவர்கள் ஆடல், பாடல், சொற்பொழிவு, சிலம்பம் மற்றும் ஜிம்னாஸ்டிக் போன்ற கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்றனர்.
தேசிய அளவில் யோகா போட்டியில் எட்டாம் வகுப்பில் பயிலும் அஸ்மா என்ற மாணவி முதல் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும், இரண்டாம் வகுப்பில் பயிலும் தெசிலன் சித்தார்த் என்ற மாணவன் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், நான்காம் வகுப்பில் பயிலும் மித்ரா ஸ்ரீ என்ற மாணவி இரண்டாவது இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் யோகா போட்டியில் பங்கேற்க உள்ளார்கள். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழ் பட்டதாரி ஆசிரியர் மீனா நன்றியுரை கூறினார். இடைநிலை ஆசிரியை ஒ.கலிய லெட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தேசிய மற்றும் மாநில அளவில் தங்கம் வெள்ளி பதக்கங்களை பெற்று சர்வதேச அளவிலான யோகா போட்டிக்கு கலந்து கொள்ள இருக்கும் பள்ளி மாணவர்கள் அஸ்மா சித்தார்த், மித்ரா ஸ்ரீ ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது, சிறப்பு பயிற்றுநர்கள் சுந்தரவேல் மாரி கணேஷ் மாரிச்செல்வம் மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர் பட்டதாரி ஆசிரியை மீனா நன்றி கூறினார்,மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)


