» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா

வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)



தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. 

மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்த நாளை ஒட்டி தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் தமிழ் துறையும், தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றமும் இணைந்து நடத்திய பேச்சுப்போட்டி நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது நடைபெற்றது. இந்த போட்டியில் 13 மாணவிகள் கலந்து கொண்டு மகாகவி பாரதியார் குறித்து பேசினர்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் அருட் சகோதரி ரூபா மகாகவி பாரதியின் எழுச்சிமிகு கவிதைகள் எவ்வாறு சாதாரண மக்களைக் கூட விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியது என்பதனை நினைவூட்டினார்.சிறப்புரையாற்றிய தூத்துக்குடி வானொலி நிலைய மேனாள் நிகழ்ச்சித் தலைவர் எம். ராதா கிருஷ்ணன்' மகாகவி பாரதி இன்றைய இளைஞர்களை அக்கினி குஞ்சாக கண்டார் என்று குறிப்பிட்டார்.

நன்றி உரையாற்றிய புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் மாரிமுத்து நூலகங்களை மாணவியர் பயன்படுத்த வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் துறை தலைவி ஜோஸ்பின் ரேணுகா, ஜெய மலர், மின்னணு நூலகர் செல்வின், நியூட்டன், ரவி, குமிழ்முனை சைமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory