» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு

செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)



தூத்துக்குடி தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பைகளைப் பயன்படுத்த மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பொறுப்பாசிரியர் ராஜகுமார் வரவேற்றார். 

தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி துணிப்பை பயன்படுத்தி அவசியத்தை எடுத்துக் கூறினார். ஆசிரியர் ஜெயிலின் நாம் ஏன் துணிப்பை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த கருத்துக்களை எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் துணிப்பையே பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory