» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அரசு பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி
திங்கள் 6, ஜனவரி 2025 3:37:52 PM (IST)

ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விதைப்பந்து தயாரித்தல் குறித்த பயிற்சி நடந்தது.
கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசியபசுமைபடை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் கீழ் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை படை மாணவர்களுக்கான பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விதைப்பந்து தயாரித்தல் குறித்த பயிற்சி நடந்தது.
பசுமை படை மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திட பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வையும், விதைப்பந்து தயாரித்தல் பயிற்சி மற்றும் பல்வேறு வகையிலான சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது.
ஊத்துப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பயன்பாடு இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு பயனுள்ளதாக மாற்றும் வகையில் பயிற்சியும்,விதைப்பந்து தயாரித்தல் பயிற்சியும் வழங்கப்பட்டது.இதில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சியும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். நாலட்டின்புதூர் காவல் நிலைய எஸ்ஐ செந்தூர்பாண்டி, கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பிரபுஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டிகல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி வனவர் பிரசன்னா, வல்லநாடு வனச்சரக உயிரியளாலர் குருமூர்த்தி ஆகியோர் விதை பந்து தயாரித்தல் குறித்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ராமமூர்த்தி, சுரேஷ்குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு பயனுள்ள பொருட்களாக மாற்றுவது குறித்தும் பயிற்சிஅளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட முதலமைச்சரின் பசுமை தோழன் திட்ட அலுவலர் அசோக்பாலாஜி சுற்றுச்சூழல் குறித்து பேசினார். இதில் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 230 க்கும் மேற்பட்ட மாணவர்கள்,ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் மணி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)

செவித்திறன் குறைந்தோர்க்கான பள்ளியில் குடியரசு தினவிழா
திங்கள் 27, ஜனவரி 2025 10:22:16 AM (IST)
