» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)

ஆறுமுகநேரியில் காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது தாயாரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி செல்வராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் இசக்கி ராஜேஷ் (25). கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த இளம்பெண் இசக்கி ராஜேஷிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இசக்கி ராஜேஷ், இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இளம்பெண்ணைத் தாக்கி, "என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய்?" எனக் கூறி கீழே தள்ளியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற இளம்பெண்ணின் தாயாரையும் இசக்கி ராஜேஷ் தாக்கியுள்ளார். 

மேலும், தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் தாய், மகள் இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கோயில்பிள்ளை வழக்குப் பதிவு செய்து, தாய் மற்றும் மகளைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இசக்கி ராஜேஷைக் கைது செய்தார்.


மக்கள் கருத்து

ஆட்டோAug 9, 2026 - 09:34:38 AM | Posted IP 104.2*****

பட்டெரி திருடன் லைனுக்கு வரவும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory