» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வரத்து குறைவு : கூடுதல் விலைக்கு விற்பனை; மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:07:23 AM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைந்ததன் காரணமாக அவை விரைவாக விற்றுத் தீர்ந்தன. மேலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து வீசி வரும் பலத்த காற்று காரணமாக, குறைந்த அளவிலான நாட்டுப்படகு மீனவர்களே தங்கு கடல் மீன்பிடிப்புக்குச் சென்று வருகின்றனர். காற்று பலமாக இருப்பதால் மீன்பாடு இன்றி குறைந்த அளவிலான மீன்களுடனேயே அவர்கள் கரைக்குத் திரும்புகின்றனர். இதன் காரணமாகக் கடந்த சில வாரங்களாகத் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலையில் கரைக்குத் திரும்பினர். பலத்த காற்று காரணமாகச் சீலா மீன்களின் வரத்து முற்றிலும் குறைந்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களை வாங்க ஏராளமான பொதுமக்களும் வியாபாரிகளும் திரேஸ்புரம் துறைமுகத்தில் குவிந்தனர். வரத்து குறைவாக இருந்தபோதிலும் தேவைகள் அதிகமாக இருந்ததால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது.
பொதுமக்கள் அதிகம் விரும்பும் மீன்களின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை உயர்ந்து காணப்பட்டது. சீலா மீன்: கிலோ ரூ. 1,500, சாளை மீன்: ஒரு வட்டா ரூ. 4,000, விளைமீன்: கிலோ ரூ. 600 வரை. பாறை மீன்: கிலோ ரூ. 500 வரை,ஊழி மீன்: கிலோ ரூ. 300 முதல் ரூ. 600 வரை, நண்டு: கிலோ ரூ. 650 வரை விற்பனை ஆனது. மேலும் கண்ணாடி பாறை, நெத்திலி போன்ற மீன்களையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால் ஏலம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்து மீன்களும் விற்றுத் தீர்ந்தன. மீன்களுக்குச் சாதகமான விலை கிடைத்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)

விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)

தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)

த.வெ.க. புதிய மாவட்ட செயலளாராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமனம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:21:54 PM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)

தூத்துக்குடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆய்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:55:52 PM (IST)








