» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்து நிலைய கட்டிடத்தை இடிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: வணிகர் சங்கப் பேரவை கோரிக்கை!

சனி 8, ஆகஸ்ட் 2026 5:27:39 PM (IST)



உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில், கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பேருந்து நிலையக் கட்டிடத்தை இடிக்கும் திட்டத்தை முதலமைச்சர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இணைச் செயலாளர் வே. குணசீலன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் "தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனுக்கு எதிராகப் போடப்பட்ட பேருந்து நிலையக் கட்டிடத் திட்டத்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் வர்த்தகப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

முறைகேடுகளுடன் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கட்டிடத்தை தற்போது இடித்துவிட்டு மீண்டும் புதிதாகக் கட்டுவது அரசு நிதி வீணாக வழிவகுக்கும். எனவே, பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, உடன்குடி பேருந்து நிலையக் கட்டிடத்தை இடிக்கும் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்காத வகையில் தமிழக முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory