» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)

ஜனநாயக முறையில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை அடக்குமுறையைக் கொண்டு எதிர்கொள்ளக் கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: "தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பெயர் மாற்றங்களைத் தவிர வேறு புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி, இலவச மிதிவண்டி உள்ளிட்ட திட்டங்களுக்குத் தவெக அரசு பெயர் மாற்றம் மட்டுமே செய்துள்ளது.

ஆண்டுக்கு 6 இலவசச் சமையல் எரிவாயு உருளைகள், மகளிருக்கு மாதம் ரூ. 2,500, அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 4,000 போன்ற தேர்தல் வாக்குறுதிகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

நடப்பு நிதியாண்டில் ரூ. 1.22 லட்சம் கோடி கடன் வாங்க அரசு திட்டமிட்டுள்ளதும், ஏற்கனவே கடந்த 3 மாதங்களில் நடைமுறைச் செலவுகளுக்காக ரூ. 22 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதும் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த பெரும் கேள்வியை எழுப்புகிறது. கொரோனா பாதிப்பு காலத்தில் கூட எடப்பாடி கே. பழனிசாமி மிகச் சிறந்த முறையில் நிதி நிர்வாகத்தைச் செய்தார்.

குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பிற்கும், வறட்சி நிவாரணத்திற்கும் உள்ள வேறுபாடு கூடத் தெரியாத வகையில் தவெக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஜனநாயகத்தில் விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது. அரசையோ தலைவர்களையோ அவதூறாகப் பேசியிருந்தால் சட்டப்படி வழக்குத் தொடர்ந்து எதிர்கொள்ளலாம்.

எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமையக் கட்சியினர் தொடர்ந்து களப்பணியாற்ற வேண்டும். என்று அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory