» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆய்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:55:52 PM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் முக்கிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.வி. முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வேளாண்மை இயக்குநருமான கே.வி. முரளிதரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (08.08.2026) நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வேளாண்மை இயக்குநருமான கே.வி. முரளிதரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (08.08.2026) நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்திற்கு முன்பாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் முக்கிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டார்: சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் வெளியேற்றும் வசதி, தனசேகர் நகரில் ரூ.9.85 கோடி மதிப்பீட்டிலான புதிய நூலகக் கட்டடப் பணி, அசோக் நகரில் ரூ.53.70 கோடி மதிப்பீட்டிலான பக்கிள் ஓடை அபிவிருத்திப் பணி மற்றும் நிக்லேசன் நகரில் ரூ.153.29 கோடி மதிப்பீட்டிலான பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டார்.
அத்திமரப்பட்டியில் ரூ.20.48 கோடி மதிப்பீட்டில் கோரம்பள்ளம் கண்மாய் தூர்வாரும் பணி மற்றும் அயன்அடைப்பு அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல் தொழில் நுட்பப் பாதுகாப்பு மையக் கட்டடப் பணிகளை ஆய்வு செய்தார்.
ஓட்டப்பிடாரம் சிப்காட் தொழில் பூங்காவில் 'வின்ஃபாஸ்ட்' (Vinfast) நிறுவனத்தின் திட்டப் பணிகள், புதியம்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவச் சேவைகள் மற்றும் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதியம்புத்தூர் ஜவுளி பூங்கா பணிகளைப் பார்வையிட்டார்.
தோட்டக்கலைத்துறை சார்பில் சொட்டுநீர் பாசன வாழை சாகுபடி, பாஞ்சாலங்குறிச்சியில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டப் பணிகள், துரைசாமிபுரத்தில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்ததோடு, பாஞ்சாலங்குறிச்சி காலனியில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கினார். மேலும், சமூக நீதி மாணவியர் விடுதியில் உணவுத் தரம் மற்றும் உட்கட்டமைப்பைச் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா. சரவணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வரத்து குறைவு : கூடுதல் விலைக்கு விற்பனை; மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:07:23 AM (IST)

விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)

தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)

த.வெ.க. புதிய மாவட்ட செயலளாராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமனம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:21:54 PM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)








