» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)

கைது நடவடிக்கைகள் மூலமாக திமுகவினரை முடக்கி விட முடியாது. தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது என்று ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ கூறினார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை விமர்சித்ததாகக் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நபர், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேற்று கையொப்பமிட்டார். பின்னர், காவல் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: "கைது நடவடிக்கைகள் மூலமாக திமுகவினரை முடக்கி விட முடியாது. தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பொதுமக்கள் எதிர்பார்த்த திட்டங்களோ அல்லது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களோ இடம்பெறவில்லை.
சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது முதல்வரை நீங்கள் அவதூறாகப் பேசியிருக்கிறீர்கள் என்று கூறினார்கள். அதற்கான விளக்கத்தை நான் தெளிவாகத் தெரிவித்துள்ளேன். முதல்வர் பக்குவமாக நடந்துகொண்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. தற்போது தமிழகத்தில் முதலீடுகள் வெகுவாகக் குறைந்துள்ளன. சுமார் 75 சதவீத முதலீடுகள் மேற்கு வங்கம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன" என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வரத்து குறைவு : கூடுதல் விலைக்கு விற்பனை; மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:07:23 AM (IST)

விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)

த.வெ.க. புதிய மாவட்ட செயலளாராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமனம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:21:54 PM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)

தூத்துக்குடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆய்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:55:52 PM (IST)








