» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அஞ்சலகங்களில் தேசியக் கொடி விற்பனை : சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு!

சனி 8, ஆகஸ்ட் 2026 3:35:18 PM (IST)

நாட்டின் 80 வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.

ஒரு தேசியக் கொடியின் விலை ரூ 25/- ஆகும். பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்களும், வணிகர்களும் எளிதாக மூவர்ணக்கொடியை வாங்கி பயன் பெறும் வகையில் கிராமப்புற அஞ்சல் அலுவலங்கள் உட்பட அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். 

கிராமப்புற அஞ்சலகங்கள் உட்படத் தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஒரு தேசியக் கொடி ரூ. 25/- என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேசியக் கொடிகளுக்கான மொத்தத் தேவை ஏதேனும் இருப்பின், 9841875710, 9791655030 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்தச் சிறப்பு ஏற்பாட்டைப் பயன்படுத்தித் தேசியக் கொடிகளை வாங்கித் தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஏற்றிச் சுதந்திர தினத்தைக் கொண்டாடுமாறு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory