» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்: குழந்தைத் திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி!

சனி 8, ஆகஸ்ட் 2026 3:08:14 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மாப்பிள்ளையூரணியில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா வழிகாட்டுதலின்படி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் "பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்" திட்டத்தின் கீழ் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் க.க. நிவேதிதா சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகளைத் தடுக்கும் முறைகள், இணையவழி துன்புறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள், குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதைக் தடுப்பதற்கான சட்டப் பிரிவுகள் குறித்து விரிவாகக் எடுத்துரைத்தார்.

மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு வழக்கறிஞர் ராம்ஜிபதி கலந்துகொண்டு, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அதற்கு எதிரான சட்டப் பாதுகாப்பு உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, குழந்தைத் திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி கூட்டத்தில் பங்கேற்ற அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் நிதி கல்வியறிவு வல்லுநர் ஜெயலட்சுமி, பாலின நிபுணர் முருகப்பெருமாள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory