» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே கார் மோதி வடமாநில வாலிபர் பலி!
சனி 8, ஆகஸ்ட் 2026 11:58:58 AM (IST)
தூத்துக்குடி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதிய விபத்தில் வடமாநில வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பீச்சபூர், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாயராம் மகன் போலநாத் (30). இவர் தூத்துக்குடி பகுதியில் நடைபெற்று நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இவர் பணி முடிந்து சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் போலநாத் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த புதுக்கோட்டை போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற கார் மற்றும் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வரத்து குறைவு : கூடுதல் விலைக்கு விற்பனை; மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:07:23 AM (IST)

விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)

தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)

த.வெ.க. புதிய மாவட்ட செயலளாராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமனம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:21:54 PM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)








