» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அங்கன்வாடி மையத்தில் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 8, ஆகஸ்ட் 2026 11:41:38 AM (IST)
தூத்துக்குடியில், பூட்டை உடைத்து அங்கன்வாடி மையத்தில் டி.வி. செட்டப் பாக்ஸ், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சின்னமணி நகர் பூங்கா அருகே மில்லர்புரம் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. தற்போது அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டதால், அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பிற்காக அருகே பயன்பாடடின்றி இருக்கும் மாநகராட்சி சமையல் எரிவாயு கூடத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில் அங்கன்வாடி உதவியாளர் சாந்தி (45) மற்றும் பணியாளர் சுசிலா ஆகியோர் வந்து பார்த்தபோது, சமையல் எரிவாயு கூடத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ வெளியே எடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் பொருட்கள் திருடப்பட்டிருந்தது.
இதில், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் 2 மூட்டைகள், டி.வி. ரிமோட், மோடம், செட்டப் பாக்ஸ் மற்றும் ஸ்டெபிலைசர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வரத்து குறைவு : கூடுதல் விலைக்கு விற்பனை; மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:07:23 AM (IST)

விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)

தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)

த.வெ.க. புதிய மாவட்ட செயலளாராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமனம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:21:54 PM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)








