» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை - தூத்துக்குடி சாலையில் பாலம் மீது கார் மோதி விபத்து : தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்!

சனி 8, ஆகஸ்ட் 2026 11:26:00 AM (IST)

நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது மோதிய விபத்தில் கணவன், மனைவி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் ஓட்டி வந்த பாலேனோ காரில் அதே பகுதியைச் சேர்ந்த சக்தி (24), திருநெல்வேலி காசிநாதபுரத்தைச் சேர்ந்த சங்கரன் (60) மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

இன்று காலை சுமார் 6.30 மணியளவில் வல்லநாடு பகுதிக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் கார்த்திக்கிற்குத் திடீரெனத் தூக்கக் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த வாய்க்கால் பாலத்தின் மீது பலத்த சத்தத்துடன் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்தக் கொடூர விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில், சங்கரன் மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து முறைப்பநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory