» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிப்காட் நில எடுப்பில் பல லட்சம் முறைகேடு?: தூத்துக்குடி ஆட்சியரிடம் பரபரப்புப் புகார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 11:10:00 AM (IST)
தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர் சிப்காட் தொழிற்பூங்கா நில எடுப்புப் பணிகளில் போலி ஆவணங்களைத் தயாரித்துப் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியரிடம் சமூகச் செயற்பாட்டாளர் கப்பிக்குளம் சு. பாபு புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், எட்டயபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக மேல் தளத்தில் இயங்கி வரும் வெம்பூர் சிப்காட் நில எடுப்பு அலுவலகத்தில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வரும் நாகராஜன் என்பவர் நில எடுப்பு தொடர்பான பட்டா மற்றும் பத்திரப் பதிவுகளைச் சரிபார்க்காமல், தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு உண்மை உரிமையாளர்கள் அல்லாத நபர்களுக்குப் போலி ஆவணங்கள் தயாரித்துப் பணப்பட்டுவாடா செய்துள்ளதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் அவருக்கும், தொடர்புடைய நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலருக்கும் ஆதாயப் பங்கு கைமாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 31 அன்று தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து அதிகாரிகளுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும், வட்டாட்சியர் அலுவலக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் இதன் உண்மைத்தன்மை தெரியவரும் .
மேலும், வெம்பூர் கிராமத்தில் ராஜேந்திர பிரசாத் என்பவருக்குச் சொந்தமான நிலத்திற்கு முறைகேடாக வேறு நபர்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுப் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 6 அன்று மாசார்பட்டி காவல் நிலையத்தில் வாய்மொழிப் புகாரும் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் சுமார் ரூ.50 லட்சத்திற்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட சமூகச் செயற்பாட்டாளர் கப்பிக்குளம் சு. பாபு, இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையும் மாவட்ட நிர்வாகமும் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடைபெற்ற நில எடுப்புக் கோப்புகளை முழுமையாக ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி நாகராஜன் மற்றும் அதற்குத் துணைபோன அலுவலர்கள் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வரத்து குறைவு : கூடுதல் விலைக்கு விற்பனை; மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:07:23 AM (IST)

விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)

தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)

த.வெ.க. புதிய மாவட்ட செயலளாராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமனம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:21:54 PM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)








