» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:43:12 PM (IST)

புளியம்பட்டி அருகே காணாமல் போன முதியவர் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமணியாச்சி கீழத்தெருவைச் சேர்ந்தவர் செல்வம் என்பவரது மகன் கருணாநிதி (70). திருமணமாகாத இவர், உறவினர்கள் யாரும் கவனிக்காத நிலையில் தனியாக ஆடு மேய்த்துப் பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகக் கல்லடைப்பு நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த அண்டை வீட்டாரும் பொதுமக்களும் உணவு வழங்கிப் பராமரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கருணாநிதி திடீரென வீட்டில் காணாமல் போயுள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.

நேற்று அப்பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆழமான கிணறு ஒன்றில் அவர் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்துத் தகவல் அறிந்த புளியம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory