» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)
மாற்றத்திற்கான அரசு எனக் கூறிவிட்டுத் தாக்கல் செய்யப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று சட்டமன்ற பட்ஜெட் விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளதாவது: "நானும் தேடிப் பார்க்கிறேன், இந்த பட்ஜெட்டில் புதிய நலத்திட்டங்கள் எதுவும் இல்லை. இது ஒரு கானல் நீர் போன்ற பட்ஜெட். திமுக அரசின் அனைத்துத் திட்டங்களையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு, எங்கள் திட்டங்களையே தொடர்ந்து செயல்படுத்தி வருகிறீர்கள். 'மாற்றத்திற்கான அரசு' என்று கூறிவிட்டு, திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றியிருப்பதுதான் தவெக அரசின் சாதனை."
மார்க்கண்டேயன் பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட சபாநாயகர், பொதுவெளியில் முதலமைச்சரைக் கடுமையாக விமர்சித்தது அவையின் மாண்புக்குக் குந்தகம் விளைவிப்பதாக உள்ளதால், இது தொடர்பாக உரிமைக்குழுவிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள தகவலைத் தெரிவித்தார்.
ஒரே விவகாரத்திற்கு இரண்டு தண்டனைகளா?
அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு: "அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்கூட்டங்களில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமானதுதான். அதுதொடர்பாகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்தால், வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்று சட்டப்படி தீர்ப்பு வழங்கப்படும்.
அதேபோல், சட்டமன்றத்தில் பேசப்படும் கருத்துகள் குறித்து நடவடிக்கை எடுக்கச் சபாநாயகருக்கும் உரிமைக்குழுவிற்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், ஒரே விவகாரத்திற்கு இருவேறு தளங்களில் இரண்டு விதமான தண்டனைகளை வழங்குவது இதுவரை இல்லாத நடைமுறையாகும்" என்று குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)

கோவில்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா: தாய்மார்கள் உறுதியேற்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:11:07 PM (IST)








