» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா: தாய்மார்கள் உறுதியேற்பு!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:11:07 PM (IST)



கோவில்பட்டியில் தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகத் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

தாய்ப்பாலின் மகத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றவும், தாய்ப்பாலூட்டுவதன் அவசியம் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை உலகத் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, கோவில்பட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் நடராஜபுரம் தெரு அங்கன்வாடி மையத்தில் உலகத் தாய்ப்பால் வார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவின் ஒருபகுதியாக அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியினைப் பாலூட்டும் தாய்மார்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து, "குழந்தைகளுக்கு முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே வழங்கி, அதன் பிறகு தாய்ப்பாலுடன் சத்தான இணை உணவுகளையும் வழங்கி அறிவுக்கூர்மையுள்ள குழந்தைகளாக உருவாக்குவோம்" எனத் தாய்மார்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலூட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வுச் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சத்தான ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இவ்விழாவிற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திலகா தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டச் சாலை பாதுகாப்புத் தலைவர் முத்து செல்வம், ரோட்டரி சங்கச் செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் பாலம்மாள் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாகக் கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன், ஊரணி தெரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வுக் கண்காட்சியைப் பார்வையிட்டு தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிப் பேசினர்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் பேச்சியம்மாள், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் திலகராணி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory