» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)



மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் தங்குதடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 'உரிமைகள்' திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டங்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் 15 ஒருங்கிணைந்த சேவை மையங்களின் செயல்பாடுகள், சமுதாய வல்லுநர்கள், சமுதாய மறுவாழ்வுப் பணியாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைந்த மையங்களில் பணியாற்றும் பணியாளர்களின் களப்பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் தங்குதடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசுத்துறை சார்ந்த பல்வேறு அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory